மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. தற்போது உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார்.
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் வாய்ஸ் எடுபடவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த படத்தின் அறிமுக விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிரஞ்சீவி பேசியதாவது:
இந்த படத்தின் கதையை கேட்டதுமே நான் வியந்து போனேன். சிக்கலான ஒரு விஷயத்தை சொல்லி அதற்கு சாதுர்யமான ஒரு தீர்வையும் அற்புதமாக சொல்லியிருக்கும் கதை. இந்தப் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒரு மாமனிதர். அவரின் எளிமையும், அர்ப்பணிப்பும் அசாத்தியமானவை. அவர் இந்தியாவின் பன்முகத்தன்மை நடிகர். அவர், பிரதான வேடத்தில் தான் நடிப்பேன் என்று என்றைக்குமே பிடிவாதம் பிடித்ததில்லை.
அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே படத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. அவர், படத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அண்மையில் மாஸ்டர் படத்தைப் பார்த்தேன். விஜய் சேதுபதியின், பவானி கதாபாத்திரத்தை அவ்வளவு நேசித்தேன் என்றார்.
இந்த விழாவில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் தெலுங்கில் பேசி ஆச்சர்யப்படுத்தினார்.