பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலின் பாண்டே மற்றும் பலர் நடித்த 'நிசப்தம்' படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பு இந்தப் படத்தைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர்.
ஆனால், படம் வந்ததும் அனைத்தும் நொறுங்கிப் போனது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள். ஒரு மொழியில் கூட படம் வரவேற்பைப் பெறவில்லை. மிக மோசனமான விமர்சனங்களையே படம் பெற்றது.
சமீபத்தில் தெலுங்கில் இப்படத்தை டிவியில் ஒளிபரப்பினார்கள். ஆனால், வெறும் 3.85 ரேட்டிங்கை மட்டுமே பெற்றது இந்தப் படம். டிவியில் கூட இப்படத்தைப் பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முற்றிலும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படம் ஓடிடி வெளியீட்டில் தான் வரவேற்பைப் பெறவில்லை, டிவியிலாவது மக்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான் கிடைத்துள்ளது.