தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
கல்கி எழுதிய நாவலான 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. பின்னர் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். இதுவரையிலும் 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பிறகுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.