'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
ஹிந்தித் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தீபிகா படுகோனே. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக அவர் நடிக்க இருந்த 'ஸ்பிரிட்' படத்திலிருந்து முதலில் நீக்கப்பட்டார். அதன்பின் 'கல்கி 2898 ஏடி' படத்திலிருந்தும் நீக்கப்பட்டார். 'ஸ்பிரிட்' படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறைய உதவியாளர்கள் கேட்கிறார், 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என கண்டிஷன் போடுகிறார் என அவர் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரையில் எதுவும் பேசாமல் இருந்தவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான பதிலைத் தந்திருக்கிறார்.
“நான் பெயர்களை சொல்ல விரும்பவில்லை அல்லது இதை பெரிய விஷயமாக்க விரும்பவில்லை. ஆனால் பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக தினசரி 8 மணி நேரம் வேலை செய்கின்றனர், திங்கள் முதல் வெள்ளி வரை, அவர்கள் வார இறுதிகளில் வேலை செய்வதில்லை என்பது பரவலாக அறியப்பட்டது. இப்போது, பல பெண்களும் புதிய தாய்மார்களும் 8 மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்யத் தொடங்கியுள்ளனர், ஆனால் அது ஒருபோதும் தலைப்புச் செய்திகளில் வருவதில்லை.
எனது தொழில் வாழ்க்கை முழுவதும் இதை எதிர்கொண்டுள்ளேன். சம்பளம் உள்ளிட்ட, எனக்கு வரும் எதையும் சமாளிக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் எனது போராட்டங்களை அமைதியாக போராடியுள்ளேன். சில சமயங்களில் அந்த போராட்டங்கள் பொதுவில் வருகின்றன, அது நான் வளர்க்கப்பட்ட விதம் அல்ல. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வதை நான் நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.