இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் |
தற்போது பாலிவுட் சினிமா வரை கொடி நாட்டி இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், காமெடியன் என கலவையான வேடங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டு வருகிறார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் மற்றும் துக்ளக் தர்பார் படத்தில் சீமானை அட்டாக் செய்திருப்பது போன்ற டீசர் வெளியான போதும் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தனது பிறந்த நாளின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். அந்த போட்டோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் கொண்டு வந்ததற்காக விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதையடுத்து அவரிடத்தில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 800 படம் குறித்த பிரச்சினை முடிந்து விட்டது. அதனால் அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அதுகுறித்து பதிலளிக்க மறுத்து விட்டார் விஜய் சேதுபதி.