டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடித்து வரும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார் போனி கபூர். எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தோடு படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்குகிறார்கள்.
ஆனபோதும் இதுவரை வலிமை படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து டைரக்டர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர். ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்கள். அதனால் தான் சமீபத்தில் கூட, கடவுள் முருகனின் பேனரை ஏந்தி, நீயாவது வலிமை படம் குறித்த அப்டேட் சொல்லு முருகா என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள், அந்த அளவுக்கு விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள் ரசிகர்கள்.
இப்படியான நிலையில், ஜனவரி 26ம் தேதி பவுடர் என்ற படத்தின் டீசரை போனி கபூர் வெளியிடுவதாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பார்த்து அஜித் ரசிகர்கள் இன்னும் டென்சன் ஆகி விட்டார்கள். பல மாதங்களாக வலிமை அப்டேட் கேட்டு வருகிறோம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத போனிகபூர், இன்னொரு படத்தின் டீசரை வெளியிடுவதா? என்றும் போனிகபூரை நோக்கி காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.




