பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா |
தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த மூன்று வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வந்தது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, படப்பிடிப்புகளை நிறுத்தினர். கூட்டமைப்பும், திரைப்பட வர்த்தக சபையும் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தெலுங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்களையும் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். கடந்த சில நாட்களாக நடிகர் சிரஞ்சீவி இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்துள்ளார்கள்.
30 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில் 22.5 சதவீத ஊதிய உர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 15 சதவீதம், இரண்டாம் ஆண்டில் 2.5 சதவீதம், மூன்றாம் ஆண்டில் 5 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்வு வழங்கப்படும்.
பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இரு தரப்பினரும் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.