ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தினர் கடந்த ஒரு வார காலமாக ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். அதனால், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக இதுவரையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதனிடையே, தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் சினிமாடோகிராபி அமைச்சர் கண்டுல துர்கேஷைச் சந்தித்து ஸ்டிரைக் குறித்து ஆலோசித்துள்ளனர். இது தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் பொறுப்பின் கீழ் வந்தாலும், இது குறித்து ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். வேறு சில முன்னணி தயாரிப்பாளர்கள் தெலுங்கானா மாநில சினிமாடோகிராபி அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என இரண்டு தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் குறித்து முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் சிறிய தயாரிப்பாளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பாளர்கள் சிறிய தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.