‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் |
ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த நித்தி அகர்வால் தமிழில் 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‛பூமி, கலகத் தலைவன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஜோடியாக ‛ஹரிஹர வீர மல்லு' படத்தில் நடித்தார், இந்தப் படம் சமீபத்தில் வெளிவந்தது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பவன் கல்யாணுடன் நித்தி அகர்வால் அரசு காரில் பயணம் செய்தார். இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டிருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில், ஆந்திர பிரதேச மாநிலம் பீமாவரம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை நித்தி அகர்வால் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு அவர் ஆந்திர மாநிலத்தின் அரசு வாகனத்தில் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இதுகுறித்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நான் வந்த வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, வாகனத்தைப் பயன்படுத்துமாறு எந்த அரசு அதிகாரிகளும் என்னிடம் கூறவில்லை” என தெரிவித்துள்ளார்.