பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
‛பர்ஹானா' மற்றும் ‛புர்கா' படங்களை தொடர்ந்து இஸ்லாமிய பெண்களின் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'பர்தா'. அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிருஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது. 'சினிமா பாண்டி', 'சுபம்' ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி உள்ளார்.
ஆனந்த மீடியா பேனரின் கீழ் விஜய் டோங்கடா, ஸ்ரீனிவாசுலு பி.வி மற்றும் ஸ்ரீதர் மக்குவா ஆகியோர் தயாரித்துள்ளனர். மிருதுல் சுஜித் சென் ஒளிபதிவு செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வருகிற 22ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணான சுப்பு தனது முகத்தை பர்தாவில் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகிறாள். ஆனால், நகரத்தைச் சேர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிரிஷ் இருவரையும் சந்திக்கும்போது சுப்புவின் விதி மாறுகிறது. சுப்புவின் வாழ்வை சுற்றி இருக்கும் 'பாரம்பரிய' சுவர்களை உடைக்க அவர்கள் உதவுகிறார்கள்.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதையாக 'பர்தா' இருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக பெண்களை கட்டிவைத்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை 'பர்தா' விமர்சிக்கிறது. அதேநேரத்தில் ஒற்றுமை, மாற்றத்திற்கான முன்னேற்றம் ஆகியவற்றையும் தைரியமாக பேசும் கதைக்களமாக 'பர்தா' உருவாகியிருக்கிறது" என்றார்.