தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
தமிழ் சினிமா உலக அளவில் பிரபலமானதற்கு முதன்மைக் காரணம் ரஜினிகாந்த். அந்தக் காலத்தில் வெளிநாட்டு வினியோகம் என்பது 'எப்எம்எஸ் - FMS' என ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும். 'Foreign Malaysia Singapore' என்பதுதான் அதன் விரிவாக்கம். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில்தான் தமிழ்ப் படங்கள் அதிகமாக வெளியாகும். அதற்கடுத்து இலங்கை முக்கிய வெளிநாடாக இருந்தது.
இப்போது தமிழ் சினிமா அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திலேலியா, அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என வெளியாகின்றன. இருந்தாலும் சினிமா வட்டாரங்களில் 'எப்எம்எஸ்' என்றே பொதுப் பெயரில் பேசப்படுகிறது. சிலர் மொத்தமாக 'ஓவர்சீஸ்' என்றும் பேசுவார்கள்.
இப்போது வெளிநாட்டு வசூலில் அமெரிக்கா வசூல் என்பது முக்கிய மற்றும் முதன்மை வசூலாக மாறிவிட்டது. இந்தியாவிலிருந்து பல இளைஞர்கள் அங்கு வேலைக்குச் சென்று செட்டிலாகிவிட்டதால் அங்கு இந்தியப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தெலுங்கு, தமிழ்ப் படங்கள் அங்கு மற்ற இந்திய மொழிப் படங்களை விட அதிக வசூலைப் பெறும்.
'சிவாஜி' படம் மூலம் அமெரிக்கா வசூலை முதன்மைப்படுத்தியவர் ரஜினிகாந்த். அவருக்குப் பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்கள் அங்கு வெளியாக வசூலைப் பெற ஆரம்பித்தன. ரஜினி நடித்து நாளை மறுநாள் வெளியாக உள்ள 'கூலி' படம் அமெரிக்க பிரிமியர் மற்றும் முன்பதிவில் தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அது தற்போது கடந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். தமிழ்ப் படம் ஒன்று இவ்வளவு வசூலை முன்பதிவில் குவிப்பது இதுவே முதல் முறை. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17 கோடிய 53 லட்ச ரூபாய். அமெரிக்கா உரிமை மட்டும் சுமார் 30 கோடிக்கு 'எம்ஜி' முறையில் விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கை ஆன்லைன் முன்பதிவிலேயே வசூலித்துவிட்டது. அமெரிக்க வசூலையும் சேர்த்து ஒட்டுமொத்த வெளிநாடுகளில் 4 மில்லியன் யுஎஸ் டாலர் அளவுக்கு முன்பதிவு நடந்துள்ளதாம்.