மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'கூலி'. இப்படம் அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களில் 6 மில்லியன் வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ்ப்படம் ஒன்று 6 மில்லியன் வசூலைக் கடப்பது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு 'ஜெயிலர்' படம் 6.8 மில்லியன் யுஎஸ் டாலர், பொன்னியின் செல்வன் 1, 6.5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளன. தற்போது, 'கூலி' வசூல் 6 மில்லியன் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2.0 படம் 5.4 மில்லியன் வசூலுடன் 4வது இடத்திலும், 'லியோ' படம் 5.2 மில்லியன் வசூலுடன் 5வது இடத்திலும் உள்ளன.
'கூலி' படம் கடந்த நான்கு நாட்களில் உலக அளவில் 44 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. இது ஹாலிவுட் படமான 'வெப்பன்ஸ்' படத்தை விடவும் சற்றே அதிகமான தொகை.