மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
“அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வருகை தந்து, ஆர்ப்பாட்டமான வில்லன், அசத்தலான குணச்சித்திரம், அதிரடி காட்டும் ஆக்ஷன் நாயகன் என பன்முக நடிப்பால் உயர்ந்து, இன்றுவரை உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை தக்க வைத்து, தமிழ் திரையுலகின் இன்றைய இளம் நாயகர்களின் திரைப்படங்களோடு போட்டியிட்டு, வசூல் சாதனையை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஓர் “அதிசயப்பிறவி”தான் நடிகர் ரஜினிகாந்த்.
இந்திய மொழிகளில் ஏறக்குறைய 170க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும், நடித்துக் கொண்டுமிருக்கின்ற இவர், ஓரிரு திரைப்படங்களைத் தயாரித்து, தன்னை ஓர் தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி அவர் தயாரித்த திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த “வள்ளி” திரைப்படம்.
1993ம் ஆண்டு தனது “ரஜினி ஆர்ட்ஸ்” என்ற தயாரிப்பு பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் 'வீரய்யன்' என்ற ஒரு நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் இவர் நடித்திருந்ததோடு, இத்திரைப்படத்திற்கான திரைக்கதை வசனத்தையும் அமைத்துத் தந்து, தன்னை ஓர் திரைக்கதாசிரியராகவும் முதன் முதலாக அடையாளப் படுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்புக் கல்லூரித் தோழனும், ஆரம்ப காலங்களில் இவரோடு பல படங்களில் இணைந்து நடித்திருந்த நடிகரும், இவரது “அன்புள்ள ரஜினிகாந்த்” திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநருமான கே நட்ராஜ்தான் இந்த “வள்ளி” திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
நடிகை ப்ரியா ராமன், நடிகர்கள் ஹரிராஜ் மற்றும் சஞ்சய் ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்து வைத்த இத்திரைப்படம்தான் மேஜிக் நிபுணராக அறியப்பட்டிருந்த மறைந்த அலெக்ஸையும் ஒரு நடிகராக அறிமுப்படுத்தியது. படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் 'இசைஞானி' இளையராஜா வழங்க, படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தன. குறிப்பாக “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” என்ற பாடல் இன்று வரை இசை விரும்பிகள் பலரது ஹிட் லிஸ்டில் ஒரு தனி இடம் பிடித்த பாடலாக இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
படம் முழுக்க வருவது போல் ஒரு நீட்டிக்கப்பட்ட கவுரவ வேடத்தில் ரஜினி நடித்திருந்தும், 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்திருந்தும், முதன் முதலாக ரஜினி திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த இந்த “வள்ளி”, ஏனோ வெள்ளித் திரையில் மின்னத் தவறி, ரஜினிக்கு வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடித்து தராமலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது.