‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை |
கன்னட நடிகரான கிச்சா சுதீப் கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அழுத்தமாக கால் பதித்தவர். தற்போது தென்னிந்திய மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் பட இயக்குனர்களின் டைரக்ஷனில் கவனம் எடுத்து நடித்து வருகிறார். இவரது படங்களின் டைட்டிலில் இவர் பெயர் கிச்சா சுதீப் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். அனைவரும் அது அவருடைய பெயர்தான் என்று நான் நினைத்து வந்திருப்பார்கள். ஆனால் கிச்சா என்கிற பெயர், நிஜப்பெயருக்கு முன்னால் எப்படி நிலைத்து நின்று விட்டது என்கிற தகவலை தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சுதீப்.
கன்னட திரையுலகில் வாய்ப்புகளுக்காக போராடி வந்த சுதீப்புக்கு தமிழில் வெளியான ‛சேது' படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சேது படத்தில் விக்ரமுக்கு ‛சீயான்' என்கிற ஒரு அடைமொழியை வைத்து பின்னர் அதுவே அவரது ரசிகர்கள் அவரை அழைக்கும் பெயராக மாறியது. அதேபோல சுதீப்புக்கும் சேது ரீமேக் படத்தில் ‛கிச்சா' என்கிற பெயரை வைத்து, படம் வெளியான பிறகு ரசிகர்கள் அனைவரும் அவரை கிச்சா என்கிற பெயரிலேயே அடையாளம் கண்டு அழைக்க ஆரம்பித்தனர். தன் முதல் பட வெற்றிக்கு காரணமான பெயர் என்பதால் தன்னுடைய பெயருடன் அதை இணைத்துக் கொண்டு விட்டாராம் நடிகர் சுதீப்.