ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல ஹிந்தியிலும் சீரான இடைவெளியில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் சுதீப் பேசும்போது, “நான் துணை முதல்வர் டி.கே சிவகுமார் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். சினிமா என்பது ஒரு மரியாதைக்குரிய, கவுரவமான தளம். ஆனால் அவர் பேசும்போது, தான் என்ன பேசுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறும்போது, “கன்னடத்தில் நடித்து சம்பாதிக்கும் நடிகர்கள் கூட இது போன்ற திரைப்பட விழாக்களை புறக்கணிக்கிறார்கள். கர்நாடக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் படங்களோ, படப்பிடிப்போ நடைபெற்றுவிட முடியாது. எங்களுக்கு தெரியும். யாருக்கு எங்கே நட்டுகளையும் போல்ட்டுகளையும் டைட் பண்ண வேண்டும். இதை எச்சரிக்கையாகவே விடுக்கிறேன்” என்று கூறியிருந்தார். அது பற்றிய கேள்வி கேட்கப்பட்ட போது தான் சுதீப் இப்படி பதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் டி.கே சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் சுதீப்பின் இந்த கருத்து பற்றி கேட்டபோது, “நான் யாருக்கும் பதில் அளிக்க விரும்பவில்லை. நான் இந்த திரை உலகிற்கு என்ன செய்திருக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பிலிம் சேம்பருக்கு சென்று அங்குள்ள வரலாற்றை புரட்டிப் பாருங்கள். காலம்தான் பதில் சொல்லும்” என்று மட்டும் கூறியுள்ளார்.