துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
கன்னட திரையுலகில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருந்தவர் மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன். இவரது நினைவாக பெங்களூருவில் உள்ள அபிமன் ஸ்டுடியோவில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. சமீபத்தில் சில கட்டுமான பணிகள் காரணமாக அந்த நினைவிடம் இடிக்கப்பட்டது. இது திரையுலகத்தினரிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அரசு செலவில் மைசூரில் அவருக்காக நினைவிடம் அமைக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
அதே சமயம் இப்படி விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டதால் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது ரசிகர்கள் தங்கள் சொந்த செலவிலேயே அவருக்காக புதிதாக ஒரு நினைவு மண்டபம் கட்டும் பணிகளில் இறங்கியுள்ளனர். இதனை அறிந்த நடிகர் கிச்சா சுதீப் அவர்களை அழைத்து பெங்களூருவில் உள்ள தனக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுத்து விஷ்ணுவர்களின் நினைவிடத்தை அமைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். எப்போதுமே நடிகர் விஷ்ணுவர்த்தனை தனது முன்னோடி வழிகாட்டி என்று தவறாமல் குறிப்பிட்டு வரும் கிச்சா சுதீப் அவரது நினைவிடம் இடிக்கப்பட்ட போது தனது இதயமே நொறுங்கியது போல இருந்தது என்று வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.
அதன் வெளிப்பாடுதான் தற்போது தனது இடத்தையே விஷ்ணுவர்த்தனம் நினைவிடத்திற்காக இலவசமாக கொடுத்துள்ளார். இது குறித்து விஷ்ணுவர்தன் ரசிகர் மன்றம் தரப்பில் சொல்லும்போது, “கர்நாடக அரசு மைசூரில் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைப்பதற்கு போட்டியாக நாங்கள் இங்கே இதை அமைக்கவில்லை. எங்களது அபிமான நடிகருக்கான ஒரு காணிக்கையாக. பெங்களூருவில் இருக்கும் ரசிகர்கள் எளிதில் அணுக வேண்டும் என்பதற்காக, எங்கள் மனதிருப்திக்காக இதை உருவாக்குகிறோம்” என்று கூறியுள்ளனர்.