'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

கடந்த 2014ல் நிவின்பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‛ஓம் சாந்தி ஒசானா' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். அதைத் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய இவர் முழு நேர நடிகராகவும் மாறிவிட்டார். இந்த நிலையில் கடந்த 2023ல் இவரது இயக்கத்தில் வெளியான ‛2018' என்கிற படம் மிகப்பெரிய வெற்றியைப் பற்றி 200 கோடிக்கு மேல் வசூலித்தது.
கேரளாவில் கடந்த 2018ம் வருடத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ள சேதம் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை மையப்படுத்தி உண்மைக்கு நெருக்கமாக இந்த படத்தை இயக்கியிருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்த நிலையில் அடுத்ததாகவும் இதே போன்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1979ல் கோவாவில் இருந்து ஜெர்மனிக்கு சரக்குகளை ஏற்றுக்கொண்டு 51 பணியாளர்களுடன் கிளம்பிய சரக்கு கப்பல் திடீரென மாயமாக மறைந்தது. அதன்பிறகு அது குறித்த மர்மம் தற்போது வரை விலகவில்லை. இந்த கப்பலில் பயணித்து உயிரிழந்த கேரளாவை சேர்ந்த கப்பல் கேப்டன் மரியதாஸ் ஜோசப்பின் மகனான தாமஸ் ஜோசப் என்பவர் இந்த கப்பல் மாயமானதன் பின்னணியில் இருக்கும் விஷயங்களை எல்லாம் நன்கு ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்த கதை உருவாக்கத்தில் இவருடன் அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ரைட் மற்றும் பத்திரிக்கையாளர் ஜோஷி ஜோசப் ஆகியோரும் இணைந்துள்ளனர்.