தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
மலையாளத்தில் 2018 என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தற்போது மோகன்லால் மகள் விஸ்மாயாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி, தொடக்கம் என்கிற படத்தை இயக்குகிறார்.
சமீபத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளாவில் உள்ள தனியார் பேருந்துகள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தன. இதனால் கேரளாவில் பல சாலைகளில் அரசு பேருந்துகள் மட்டுமே ஓடியதால் வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஜூட் ஆண்டனி ஜோசப், தனியார் பேருந்துகள் ஓடாத கேரளாவை பார்க்கும் போது வெளிநாட்டில் இருப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். அதில் நன்றாக வாகனம் ஓட்டும் சிலரையும் நாம் மறந்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே கேரளாவில் தனியார் பேருந்து வாகன ஓட்டுநர்களின் அடாவடி நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தான், சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இயக்குனரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இருவித குரல்கள் எழுந்துள்ளன. சிலர் நிறைய ஓட்டுநர்கள் ரொம்பவும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக கேரளாவில் மிக மோசமான ஓட்டுநர்கள் என்றால் எர்ணாகுளத்தில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதே சமயம் பலர் இன்று பேருந்துகள் ஓடாததால் எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. உங்களை போன்ற வசதியானவர்கள் காரில் செல்வீர்கள். எல்லோரும் அப்படி காரில் செல்ல முடியுமா என்று பதில் கேள்வி எழுப்பி உள்ளார்கள். இன்னும் ஒருவர் பஸ் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக எர்ணாகுளத்தில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என எதுவுமே இல்லாமல் இருந்தால் அது மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.