மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி |

கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு  'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது.  2025ம் ஆண்டுக்கான கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த  கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து  அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இதனை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் "திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது"  என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009ம் ஆண்டு காலாமானர். தமிழ் நாட்டில்  'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி  கடந்த ஜூலை 14ந்தேதி மரணம் அடைந்தார். 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            