தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் |
பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் 1938ம் ஆண்டு ஜன.,7ல் பிறந்த இவர் தனது 17வது வயதில் ‛மகாகவி காளிதாஸ்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகாகி புகழ்பெற்றார். தமிழில் ‛நாடோடி மன்னன்' என்ற படத்தில் எம்ஜிஆர் உடன் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். சரோஜாதேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார். 1986லேயே அவர் மறைந்துவிட்டார். புவனேஷ்வரி, இந்திரா என இரு மகள்களும், கவுதம் ராமச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், தமிழகம் உள்ளிட்ட பிறமாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார்.
சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரபலங்களும், திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்த வீட்டில் குவிந்தனர்.
செவ்வாய் அன்று இறுதிச்சடங்கு
நடிகை சரோஜா தேவியின் இறுதிச்சடங்கு நாளை(ஜூலை 15) செவ்வாய் அன்று பெங்களூருவில் அரசு மரியாதை உடன் நடக்கிறது.
சோகத்திலும் ஒற்றுமை
சரோஜாதேவி நடித்த பல பாடல்களுக்கு ‛மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அவரின் நினைவு தினம் இன்று(ஜூலை 14). இந்த நாளிலேயே சரோஜாதேவியும் மறைந்தது திரை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல 2015ம் ஆண்டில் எம்எஸ்வி இறக்கும் போது அவரது வயது 87. இன்று மறைந்த சரோஜாதேவியின் வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது.