லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
2010ல் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'கட்டா மீத்தா' என்கிற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த நடிகை கைனாட் அரோரா. அதே சமயத்தில் தான் தமிழில் உருவாகி வந்த 'மங்காத்தா' திரைப்படத்திலும் 'மச்சி ஓபன் தி பாட்டில்' என்கிற பாடலுக்கு ஐட்டம் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் கைனாட் அரோரா.
அதன்பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லைலா ஓ லைலா' படத்தில் லைலா என்கிற டைட்டில் கதாபாத்திரத்திலும் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி, பஞ்சாபி மொழிகளில் நடித்து வந்தாலும் 2022க்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அஜித் ஆகியோர் தனது சினிமா என்ட்ரி குறித்து தனது ஆரம்ப காலத்திலேயே அறிவுரை சொன்னதாக கூறியுள்ளார் கைனாட் அரோரா.
குறிப்பாக சஞ்சய் தத் இவரிடம் சினிமாவில் நடிப்பது குறித்து மறுபரிசீலனை செய் என்றே கூறியுள்ளார். மங்காத்தா படத்தில் நடித்த போது நடிகர் அஜித் என்னிடம், 'கைனாட் நீங்கள் ரொம்பவே எளிமையாக இருக்கிறீர்கள். அதேசமயம் இந்த பயணம் அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் அதற்கு முழுதாக தயாராக வேண்டும்' என்று அறிவுரை கூறினார். அதேபோல அக்ஷய் குமார், மோகன்லால் மற்றும் விவேக் ஓபராய் போன்றவர்களிடமிருந்து மிக முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டேன்” என்றும் கூறியுள்ளார்.