மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'நேசிப்பாயா' படத்தின் புரொமோசனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் பில்லா படம் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏர்ப்படுத்தியுள்ளது.
அதன்படி, "ரஜினியின் 'பில்லா' படம் வெளியான காலகட்டத்தில் சரியாக ஓடவில்லை. இந்த படத்தையா நாம் ரீமேக் செய்யப் போகிறோம் என்று எனக்கு எனக்கு தோன்றியது. ஆனால்,எனக்கு அந்த படத்தில் பிடித்தது என்னவென்றால் அந்த காலகட்டத்திலேயே அதில் ஒரு டார்க் ஆன கேரக்டரை வடிவமைத்திருப்பார்கள். எனவே அது ஒரு சிறந்த ஐடியா என்று எனக்கு தோன்றியது” என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து விஷ்ணுவர்தனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் 'பில்லா' வெற்றிப்படம் என்பதற்கான ஆதாரங்களை பதிவிட்டு வருவதோடு, விஷ்ணுவர்தனையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஷ்ணுவர்தனுக்கு பதிலளிக்கும் வகையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி, “1980ம் ஆண்டு வெளியான 'பில்லா' படம் சில்வர் ஜூபிளி ஹிட் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரான சுரேஷ் பாலாஜியிடம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். தவறான தகவல்களை தவிர்க்க உங்கள் வார்த்தைகளில் துல்லியத்தை உறுதி செய்யுமாறு நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.