மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த படம் வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் காட்டிய பாரபட்சமான நிகழ்வு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வீடியோவாக வைரல் ஆகி வருவதுடன் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.
அந்த நிகழ்வுக்கு வந்த நித்யா மேனனை அந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் வரவேற்று பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்காக மைக் முன்னால் நிற்க சொல்லி பேச சொல்கிறார். அப்போது நித்யா மேனனிடம் அவர் கைகுலுக்க கை நீட்டுகிறார். ஆனால் நித்யா மேனன், ''ஐயோ எனக்கு உடம்பு சரியில்லை.. உங்களை தொட்டால் என்னிடமிருந்து கோவிட் ஏதாவது உங்களுக்கு ஒட்டிக் கொள்ள போகிறது'' எனக் கூறி சிரித்தபடியே சொல்லி கை கொடுப்பதை தவிர்க்கிறார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே படத்தின் வில்லன் நடிகர் வினய் ராய், நித்யா மேனனை பார்த்து ஹாய் என்று கூறியபடி அருகில் வர அவரை மெதுவாக கட்டிப்பிடிக்கிறார் நித்யா மேனன். அது மட்டுமல்ல அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சற்று முன் வந்து தன்னை கடந்து சென்ற இயக்குனர் மிஷ்கினை தானே வலிய அழைத்து அவரது கன்னத்தில் முத்தமிட, மிஷ்கின் அவரது கையில் முத்தமிட்டார். அதேபோல், நாயகன் ஜெயம் ரவியையும் கட்டிப்பிடித்தார்.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் கை கொடுத்தால் கோவிட் பரவும் என்றால் கட்டிப்பிடித்தால் மட்டும் கோவிட் பரவாதா ? பிரபலங்கள் என்றால் ஒரு மாதிரி.. சாதாரண நபர்கள் என்றால் வேறு மாதிரி நடத்துவதா.. ? இப்படி பொதுவெளியிலேயே பகிரங்கமாக நடந்து கொள்ளலாமா என்று தங்களது விமர்சனத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.