இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பரவலாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது மைசா என்ற படத்தில் கதையின் நாயகியாக ஆக்ஷன் ரோலில் நடித்திருக்கிறார். ரவீந்திரா புல்லே என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ராஷ்மிகா.
அது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இனிமேல் புதிதாக சுவராஸ்யமாக வித்தியாசமான கதாபாத்திரங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சி செய்வேன். இந்த படமும் அப்படிப்பட்ட ஒரு முயற்சி தான். குறிப்பாக இதுவரை நான் நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரம். இதுவரை ரசிகர்களுக்கு நான் காட்டாத புதிய முகம். அதோடு இது பயங்கரமானது. ஒரு பக்கம் பதட்டமாகவும், இன்னொரு பக்கம் உற்சாகமாகவும் இருக்கிறேன். நாங்கள் உருவாக்கும் இந்த வித்தியாசமான படைப்பை நீங்கள் எப்போது பார்ப்பீர்கள் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஆரம்பம்தான் என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.
மைசா படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒரு பாரம்பரிய புடவையில் பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சிந்திய தோற்றமும், கைப்பிடியில் பிடித்து வைத்திருக்கும் மர்மப் பொருளும், கதையின் மிரட்டலான தருணங்களை நமக்கு முன்வைக்கின்றன.
ஏற்கனவே அனுஷ்கா காட்டி என்ற படத்தில் கஞ்சா வியாபாரியாக டெரர்ரான தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது அதையே மிஞ்சும் வகையில் மைசா படத்தில் அதிரடியாக வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார் என்பது இந்த படத்தின் போஸ்டர் மூலம் தெரிய வந்திருக்கிறது.