பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
'தக்லைப்' படத்தின் தோல்வி கமலை ரொம்பவே பாதித்துள்ளது. குறிப்பாக, அவர் படங்களின் வியாபாரத்தை பாதித்துள்ளது. அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் கமல். அந்த படம் சின்ன பட்ஜெட்டில் உருவாகிறது. 'விக்ரம், தக்லைப்' மாதிரி பெரிய பட்ஜெட் கதை அல்ல என்கிறார்கள். அடுத்து 'சித்தா, வீர தீர சூரன், சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிறார்கள். அதுவும் சின்ன பட்ஜெட் படம்தான்.
தக்லைப் தோல்வி காரணமாக பெரிய பட்ஜெட் படம் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறாராம் கமல்ஹாசன். இதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தபின் அவரை வைத்து படம் எடுக்க பல நிறுவனங்கள் தயங்குகின்றன. அதனால், தனது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அதிகம் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இன்றைய சூழ்நிலையில் பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து அது தோல்வி அடைந்தால் அது தனது நிறுவனத்தையும் பாதிக்கும் என்று நினைக்கிறாராம். அதேசமயம், ராஜ்கமல் தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' பெரிய வெற்றி பெற்றது. பல கோடி லாபத்தை அள்ளி தந்தது. மற்ற கமர்ஷியல் ஹீரோ கால்ஷீட் கொடுத்தால் அந்த மாதிரி படத்தையும் தயாரிக்க கமல் தரப்பு தயாராம்.