இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள படம் 'டிரண்டிங்'. சிவராஜ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கலையரசன், பிரியா லயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா, பிரியங்கா, கவுரி, பாலாஜி, தியாகராஜன், தயாளன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைக்க, பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜூலை 18ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சிவராஜ் கூறும்போது "இன்றைய காலக்கட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்களில் ஒன்று, சமூக வலைதளங்கள். இதன்மூலம் இளம் தம்பதிகள் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்படும் பல்வேறு ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி, முழுநீள கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளேன்.
ஆன்லைனில் மூழ்கியுள்ள தம்பதிகளை பற்றிய கதை கொண்ட இப்படம், 3 பேர் கோணத்தில் நகரும். பிரபல யூடியூபர்கள் வேடங்களில் கலையரசன், பிரியா லயா நடித்துள்ளனர். ஆன்லைனில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அந்த கேம் இறுதியில் அவர்களை எந்த பிரச்னையில் சிக்க வைக்கிறது என்பது திரைக்கதை" என்றார்.