இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ரேசர் எண்டர்பிரைசஸ் சார்பில் ரேஷ்மா தயாரிக்கும் படம் மதர். சரீஷ் இயக்கி நாயகனாக நடிக்கிறார். அர்திகா கதை நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமைய்யா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், தேவ ராஜன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநனர் சரீஷ் கூறும்போது "இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது. ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச் சிக்கலை மையப்படுத்தி, கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார். குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.