இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. இப்படம் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால், அறிவித்தபடி அந்தப் படம் வராது என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள மற்றொரு படமான 'டூயுட்' படத்தை அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் அக்டோபர் 17ம் தேதியன்று 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை வெளியிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள். ஒரே மாதத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.
'டூயுட்' படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாகத்தான் அறிவித்துள்ளார்கள். ஆனால், தேதியை இன்னும் சொல்லவில்லை. அப்டோபர் 20ம் தேதி தீபாவளி வர உள்ளது. 'டூட்' படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பார்களா அல்லது ஏற்கெனவே அறிவித்தபடி அக்டோபர் மாதத்தில் வெளியிடுவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.