பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மதராஸி'. இப்படத்தின் தமிழக உரிமையை வேல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுமார் 40 கோடி கொடுத்து அந்த உரிமையை வாங்கியுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'அமரன்' திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை மனதில் வைத்து இந்தப் படத்தின் வியாபாரம் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். படத்தை வேல்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தாலும் அவர்கள் கமிஷன் அடிப்படையில் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம்.
கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்குச் சென்றுவிடும். இப்படித்தான் 'அமரன்' திரைப்படத்தின் வியாபாரமும் நடந்தது. சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அதனால்தான், இந்தப் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.