ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
தற்போது நடிகர் விஜய் எச்.வினோத் இயக்கி உள்ள 'ஜனநாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், ஸ்ருதிஹாசன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இந்த 'ஜனநாயகன்' படம்தான் அவரது கடைசி படம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் ஜனநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை மமிதா பைஜு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''இந்த படத்தின் நடித்து வந்த போது ஜனநாயகன்தான் உங்களது கடைசி படம் என்று சொல்கிறார்களே அப்படியா? என்று நான் விஜய் சாரிடத்தில் கேட்டேன். அதற்கு, இதுதான் கடைசி படமா? என்பது எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகுதான் முடிவெடுப்பேன் என்று கூறினார்'' என தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.
அதனால் வருகிற சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று தான் முதல்வராகி விட்டால் விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிக்க மாட்டார். அப்படி இல்லை என்றால் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலிலும் ஈடுபடுவார் என்பது தெரிய வந்திருக்கிறது.