Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா

23 ஜூன், 2025 - 11:57 IST
எழுத்தின் அளவு:
Trisha-creates-a-stir-with-congratulatory-photo-for-Vijay


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். நேற்றைய நாள் ஆரம்பித்த நிமிடத்திலேயே அவருடைய கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். அதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த விஜய்யின் தீவிர ரசிகர்கள் அப்போதே வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னர் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்கள். எத்தனையோ சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது ஓரளவிற்கே லைக்குகள், வியூஸ்கள் எனப் பெற்றாலும் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவைப் பகிர்ந்து அவருக்கு “ஹாப்பி பர்த்தே பெஸ்டஸ்ட்' என வாழ்த்தி, பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

அவருடைய வாழ்த்துப் பதிவு எக்ஸ் தளத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 69 ஆயிரம் லைக்குகளையும், 11 ஆயிரம் மறுபதிவுகளையும், 1000க்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. இன்ஸ்டா தளத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 9 ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.

பல ரசிகர்கள் அது எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என எக்ஸ் தளத்தின் 'க்ரோக்' ஏஐயிடம் கேள்வி கேட்ட கமெண்ட்டுகளையும் பார்க்க முடிந்தது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண்தென்னிந்தியப் படங்கள் இந்திய ... 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

angbu ganesh - chennai,இந்தியா
23 ஜூன், 2025 - 02:06 Report Abuse
angbu ganesh எத்தனையாவது திரிஷா பணம் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்
Rate this:
நிவேதா - Dindigul,இந்தியா
23 ஜூன், 2025 - 01:06 Report Abuse
நிவேதா ஆண்டவரை நம்பி மோசம் போன திரிஷா விஜய் தான் நல்ல மேய்ப்பாளர் என உணர்ந்த தருணம் இது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in