ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
சினிமா பிரபலங்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருப்பதை ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியின் போதும் ஸ்டேடியத்தில் பார்க்க முடியும். அந்த வகையில் நடிகை நவ்யா நாயர் தனது பேவரைட் கிரிக்கெட் வீரரான இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியை சமீபத்தில் லண்டனில் சந்தித்துள்ளார்.
தமிழில் 'அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர் நடன பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த நவ்யா நாயர் அங்கே, தான் ஆராதிக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக கங்குலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நவ்யா நாயர், “என்னுடைய லண்டன் சுற்றுப்பயணத்தில் ஒன் அண்ட் ஒன்லி சவுரவ் கங்குலியை சந்தித்தது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. ஒரு பள்ளி மாணவியாக தொலைக்காட்சியில் பெங்கால் தாதா விளையாடியதைப் பார்த்து கொண்டாடிய எனக்கு இன்று அவரை நேரில் சந்திக்கும் இந்த தருணம் என்றென்றும் நினைவில் இருந்து அகலாது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.