யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
தமிழில் நேற்று வெளியான இரண்டு படங்கள் 'ரெட்ரோ, ஹிட் 3'. சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'ரெட்ரோ' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சிம்ரன் கடந்த சில வாரங்களாகவே தனது குடும்பத்துடன் லண்டனில் இருக்கிறார். அதனால், 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் தான் நடித்த படத்திற்காக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். நேற்று லண்டனில் தனது கணவர், இரண்டு மகன்கள் ஆகியோருடன் படத்தைப் பார்த்துள்ளார். அது குறித்த வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார்.
சிம்ரன் தான் நடித்த படத்தை லண்டனில் பார்த்ததைப் போலவே நடிகை பூஜா ஹெக்டே தான் நடித்த 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளார். பூஜா தற்போது ஹிந்தியில் நடித்து வரும் 'ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' படத்தில் உடன் நடிக்கும் நடிகர் வருண் தவான், நடிகை மிருணாள் தாகூர் ஆகியோருடன் படத்தைப் பார்த்த வீடியோ வெளியாகி உள்ளது.
சிம்ரன், பூஜா ஹெக்டே இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே நடனத்தில் சிறப்பான திறமை கொண்டவர்கள். அதற்கனெ அவர்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.