தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்த ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெகு விமர்சியாக வெளியானது. கலைவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரெட்ரோ திரைப்படம் சுமார் 11 கோடி வரை வசூலித்துள்ளது. மற்ற மாநிங்களை பொறுத்தவரை கேரளாவில் 2.20 கோடியும், கர்நாடகாவில் 2 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்த்து 2.10 கோடியும், மீதமுள்ள மற்ற இந்திய மாநிலங்களில் 30 லட்சம் வரை வசூலித்துள்ளது. இந்தியாவை தவிர்த்து ஒட்டுமொத்த வெளிநாடுகளில் சேர்த்து பார்த்தால் மொத்தம் 7 கோடி வரை வசூலித்துள்ளது. ஆக மொத்தத்தில் ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் சுமார் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த திரைப்படம் 3 நாட்களுக்கு வசூலில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதே இங்கு உள்ள திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.