சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரபாஸ், பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் டீசர் இன்று காலை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் யு டியுபில் வெளியிடப்பட்டது.
வெளியான சில மணி நேரங்களில் ஹிந்தி, தெலுங்கு டீசர் இரண்டுமே தலா 4 மில்லியன் பார்வைகளைக் கடந்து போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. பான் இந்தியா ஸ்டார் ஆக உள்ள பிரபாஸ் நடிக்கும் படங்களின் வீடியோக்கள் எது வந்தாலும் அவை ஹிந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அது இந்தப் படத்திற்கும் கிடைத்துள்ளது.
அதேசமயம், கன்னட டீசர் 6 லட்சம் பார்வைகளையும், மலையாள டீசர் 5 லட்சம் பார்வைகளையும், தமிழ் டீசர் 4 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது. இவற்றில் தமிழ் டீசர் பின்தங்கி கடைசியில் உள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.
தெலுங்கு டீசர்களைப் பொறுத்தவரையில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ராதே ஷ்யாம்' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 42.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை வேறு எந்த ஒரு தெலுங்குப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.