2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மேலாளராக இருந்தவர் பாலமுருகன். இவர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி 40 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தற்போதைய மேலாளர் தர்மராஜ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் என்பவரின் தூண்டுதலின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சங்கர்பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து 'எவர்கிரீன் மீடியா' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த நிறுவனம் நடிகர் சங்கத்தின் ஒரு நிறுவனம் என்று சட்டவிரோதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள். நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி அனைத்து உள்ளூர், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகளை பெற்று, அதன் மூலம் பல நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடியாக ஏமாற்றி வந்துள்ளனர். அந்தவகையில் சுமார் ரூ.40 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே நடிகர் சங்கத்தின் பெயரையும், எங்களின் அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, சங்கத்தை ஏமாற்றி மோசடி செய்து வரும் பாலமுருகன், சங்கர் பாபு, சதீஷ்குமார் ஆகியோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய விசாரணை நடத்தவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.