மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் உன்னி முகுந்தன். மலையாளம் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கிலும் அவ்வப்போது முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அது மட்டுமல்ல மலையாளத்தில் தொடர்ந்து படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். கடந்த வருட இறுதியில் இவரது நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இவரது மேனேஜர் விபின் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் டொவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்ட' படத்தை பற்றி தான் புகழ்ந்து பதிவிட்டதற்காக, உன்னி முகுந்தன் இப்படி செய்துள்ளார் என்று புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக நீண்ட பதிவு ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த விபின் என்பவர் என்னுடைய மேனேஜரே அல்ல. நான் என்னுடைய முதல் படத்தை தயாரிக்க ஆரம்பிக்கும்போது என்னிடம் வந்தவர். தான் ஒரு பிஆர்ஓ என்றும் பல பிரபலங்களுக்கு பணியாற்றியிருக்கிறேன் என்றும் கூறியதால் என்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். ஆனால் அதிகாரப்பூர்வ மேனேஜராக அல்ல. அதற்கு பின் வந்த சில வருடங்களில் அவர் என்னைப் பற்றி தேவையில்லாத விஷயங்களையும் பொய்களையும் வெளியில் கட்டவிழ்த்துவிட்டு என் மீது தவறான ஒரு பிம்பத்தை உருவாக்குவதை நான் கேள்விப்பட்டேன். மேலும் அவர் மூலம் வேறு சில பிரச்னைகளும் ஏற்பட்டன.
குறிப்பாக ஒரு நடிகையை தொடர்பு கொண்டு என் பெயரை முன்னிறுத்தி திருமணம் வரை பேசியுள்ளார். அதன்பிறகு தான் நானும் என்னுடைய நண்பர் விஷ்ணு உன்னித்தன் என்பவர் முன்னிலையில் விபினை அழைத்து கண்டித்தேன். அதற்கு தன் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். அதை ஒரு கடிதமாக எழுதிக் கொடுக்கும்படி அவரிடம் கூறினோம். தருகிறேன் என்று சொன்னவர் அதன் பிறகு என்னைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக சோசியல் மீடியாவில் தவறான செய்திகளை பரப்பியதோடு என் மீது காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். அவர் என் மீது கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்களே. அவரை அடித்ததாக கூறுவதும் பொய்தான். ஏனென்றால் அந்த இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. சோதனை செய்தால் உண்மை என்னவென்று தெரிந்து விடும்” என்று கூறியுள்ளார்.




