Advertisement

சிறப்புச்செய்திகள்

கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா | பிளாஷ்பேக்: ஏவிஎம் ஸ்டூடியோவில் உருவான முதல் படம் | கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பள்ளி ஆசிரியர் டூ நடிகர் : ‛அந்த 7 நாட்கள்' ராஜேஷின் வாழ்க்கை பயணம்

29 மே, 2025 - 11:10 IST
எழுத்தின் அளவு:
School-teacher-turns-actor-:-Rajesh-life-journey

திரையுலகில் 49 ஆண்டுகளை எட்டிய மூத்த நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் சென்னையில் காலமானார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம், தொழிலதிபர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்ட இவரின் வாழ்க்கை பயணத்தை பார்ப்போம்.

பள்ளி ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ராஜேஷ் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம், அனைக்காடு ஆகிய ஊர்களில் படித்து, பியூசி படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் ஆசிரியருக்கான பயிற்சியையும் பெற்ற அவர் சென்னை, ராயபுரம், புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சில ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தார். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே சினிமா வாய்ப்பு தேடினார்.



சினிமா அறிமுகம்
நடிகை சுகுமாரியின் மூலம் இயக்குநர் கே பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க அவரின் "அவள் ஒரு தொடர்கதை" படம் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளராக சிறு வேடத்தில் நடித்தார். பின் 1979ல் பிவி பாலகுரு இயக்கிய "கன்னிப் பருவத்திலே" படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதில் வில்லனாக பாக்யராஜ் நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து "தனிமரம், தைப்பொங்கல், நான் நானேதான்" ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தாலும் பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் வெளிவந்த "அந்த 7 நாட்கள்" படம் இவரை மேலும் பிரபலமாக்கியது.

பன்முக கலைஞர்
தொடர்ந்து "அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம், "சிறை, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" போன்ற படங்கள் இவரது திரைப்பயணத்தில் குறிப்பிடும்படியான திரைப்படங்களாக அமைந்தன. மென்மையான நடிப்பிற்கும், கணீர் குரலுக்கும் சொந்தக்காரரான ராஜேஷ் படங்கள் தவிர்த்து "அலைகள்", "ஆண்பாவம்", "அக்கா", "களத்து வீடு", "ரோஜா", "சூர்யவம்சம்" என ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.



"டும் டும் டும்", "ஜுட்", "மஜா", "உள்ளம் கேட்குமே", "ராம்" போன்ற படங்களில் மறைந்த மலையாள நடிகர் முரளிக்கும், "பொய் சொல்லப் போறோம்" படத்தில் மறைந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணுவிற்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.

சினிமா தவிர்த்து ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸினஸ் போன்ற தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இவர், ஜோதிடம் பற்றி பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இப்படி பன்முக திறமை கொண்ட இவர் தனது 49 ஆண்டுகால கலைப்பயணத்தில் ஏறக்குறைய 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராஜேஷ் பயோடேட்டா
இயற்பெயர் : ராஜேஷ்
பிறப்பு : 20-12-1949
இறப்பு : 29.05.2025
பிறந்த இடம் : மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்
மனைவி : ஜோன் சில்வியா (இறப்பு)
குழந்தைகள் : திவ்யா (மகள்) - தீபக் (மகன்)
பெற்றோர் : வில்லியம்ஸ் நாடார் - லில்லி கிரேஸ்



ராஜேஷ் நடித்த முக்கியமான திரைப்படங்கள்
1. கன்னிப்பருவத்திலே
2. தனிமரம்
3. தெப்பொங்கல்
4. நான் நானேதான்
5. அந்த 7 நாட்கள்
7. ஒருத்தி மட்டும் கரையினிலே
8. மயில்
9. பாக்கு வெத்தல
10. சிவந்த கண்கள்
11. தனிக்காட்டு ராஜா
12. தேவியின் திருவிளையாடல்
13. பயணங்கள் முடிவதில்லை
14. மெட்டி
17. வெற்றி நமதே
18. அனல் காற்று
19. கண் சிவந்தால் மண் சிவக்கும்
20. அச்சமில்லை அச்சமில்லை
21. ஆலயதீபம்
22. எழுதாத சட்டங்கள்
23.குழந்தை ஏசு
24. சிறை
25. நாணயம் இல்லாத நாணயம்
26. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
27. மேல்மருவத்தூர் அற்புதங்கள்
28. சமயபுரத்தாளே சாட்சி
29. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
30. யாரோ எழுதிய கவிதை
31. மண்ணுக்குள் வைரம்
32. காலம் மாறுது
33. மக்கள் என் பக்கம்
34. சத்யா
35. தர்மதேவன்
36. பெண்புத்தி முன்புத்தி
37. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
38. காவலுக்கு கெட்டிக்காரன்
39. சிறையில் பூத்த சின்னமலர்
40. நல்ல காலம் பொறந்தாச்சு
41. புதுப் புது ராகங்கள்
42. ஜெய்ஹிந்த்
43. மகாநதி
44. பொங்கலோ பொங்கல்
45. ரெட்
46. கோவில்
47. ஆட்டோகிராப்
48. அறை எண் 305ல் கடவுள்
49. சேவல்
50. தர்மதுரை

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மன்னிப்பு கேட்பதாக கூறிவிட்டு அவதூறு பரப்பி விட்டார் ; மேனேஜர் குற்றச்சாட்டுக்கு உன்னி முகுந்தன் பதில்மன்னிப்பு கேட்பதாக கூறிவிட்டு ... ராஷ்மிகாவின் 'போட்டோகிராபர்' விஜய் தேவரகொண்டா ? ராஷ்மிகாவின் 'போட்டோகிராபர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in