பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தெலுங்கில் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'கிங்டம்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்கிய ஸ்ரீ நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர், ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஜூலை 4ம் தேதி கிங்டம் படம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். மேலும், அனிருத்தின் தீவிரமான ரசிகரான விஜய் தேவரகொண்டா முதல் முறையாக தனது படத்திற்கு அவர் இசை அமைத்திருப்பதால் அதை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
குறிப்பாக இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தன்னுடைய ரவுடி பிராண்ட் டீசர்ட் மற்றும் பேட்மிண்டன் ராக்கெட் என இரண்டு பரிசுகளை அனிருத்துக்கு அவர் வழங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்றை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.