'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? |
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அதையடுத்து இயக்குனர் ராஜமவுலியும் இப்படத்தை பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியும் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'எளிமையான மனதை தொடும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை ஒரு ரத்தினமாக மாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர் - நடிகைகள் அனைவருக்கும் மிக்க நன்றி' என அவரது பதிவில் தெரிவித்து இருக்கிறார்.