'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? |
சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலா, அதர்வா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இந்த படத்தின் டைட்டிலை அறிவித்தபோது, இதே டைட்டிலை தான் நடிக்கும் 'சக்தித் திருமகன்' எனும் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கும் வைத்திருப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய் ஆண்டனி. அதையடுத்து இரண்டு தரப்பிற்குமிடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்திற்கு 'பராசக்தி' டைட்டிலை விட்டுக் கொடுப்பதாக கூறியிருந்தார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் அது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில், ''சினிமா துறையில் மூன்று சங்கங்கள் இருப்பதால், பராசக்தி டைட்டிலை நான் பதிவு செய்து வைத்திருப்பதை தெரியாமலேயே அவர்கள் இன்னொரு சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். என்றாலும் எங்கள் கதைக்கு அந்த டைட்டில்தான் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் சுதா கேட்டுக்கொண்டதால், நட்புக்காக அந்த டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டேன். இப்போது நான் நடிக்கும் தெலுங்கு படத்திற்காக வேறு டைட்டிலை யோசித்து வருகிறேன்,'' என்று கூறியிருக்கிறார் விஜய் ஆண்டனி.