கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக்லைப்'. ஜூன் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 'ஜிங்குச்சா, சுகர் பேபி' ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது சிம்புவின் 'ஓ மாறா' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை பால் டப்பா எழுதி, பாடியுள்ளார். திரிஷாவின் சுகர் பேபி பாடலைப் போலவே இந்த ஓ மாறா பாடலுக்கும் ரசிகர்கள் பெரிய அளவில் லைக் கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.