சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் | வாடிவாசல் : வெற்றிமாறன் பேச்சிலும் குழப்பம் | சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி | ‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் |
நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், வாரணம் ஆயிரம், பீஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக அவர் இயக்குனராக களமிறங்கி இயக்கியுள்ள படம் ‛கிஸ்'. இதில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். நாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று சமீபத்தில் நிறைவு பெற்றது. முழுக்க முழுக்க காதல் கதையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் சதீஷ். ஏற்கனவே இந்த படத்தை பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் அந்த சமயம் பட பணிகள் முடியவில்லை. தற்போது ஜூலை மாதத்தில் படத்தை வெளியிடுவதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.