மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இந்த மூவர் தவிர படத்தில் வேறு யார், யார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் அதிகம் வெளியாகவில்லை. இதனிடையே, தமிழ் நடிகர் விக்ரம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
பான் இந்தியா படங்களாக உருவாகும் படங்களில் மொழிக்கு ஒரு நடிகரை நடிக்க வைத்தால் அந்தந்த மொழிகளில் கொண்டு போய் சேர்ப்பது எளிது. தமிழில் கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் விக்ரம், ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.