ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பான் இந்தியா என்ற வார்த்தை சினிமாவில் மிகவும் பிரபலமானது. அதன்பின்பே ஒரு மொழியில் தயாராகும் படத்தை மற்ற சில மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படம் என வெளியிடுகிறார்கள். அப்படி ஒரு பிரபலம், வசூல் வரவேற்பை தெலுங்குப் படங்கள்தான் பெற்று வருகின்றன. வருடத்திற்கு ஒரு படமாவது அப்படி அமைந்துவிடுகிறது. கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.
ஹிந்திப் படங்கள் சில மற்ற தென்னிந்திய மொழிகளில் டப்பிங் ஆனாலும் பெரும் வசூலைக் குவிப்பதில்லை. மலையாளப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் பான் இந்தியா பிரபலம் கிடைத்தாலும் வசூல் கிடைப்பதில் தடுமாற்றம் இருந்து வருகிறது.
தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் அப்படி ஒரு வசூலை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் தமிழைத் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் கூட குறிப்பிடும்படியான வசூலைப் பெறுவதில்லை.
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'தக் லைப்' படம் ஜுன் 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்திற்காக இந்தியா முழுவதும் புரமோஷன் சுற்றுப்பயணத்தை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், விசாகப்பட்டிணம், மலேசியா, துபாய் ஆகிய இடங்களுக்கு படக்குழுவினர் போக உள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
'பொன்னியின் செல்வன்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு பான் இந்தியா பெருமையை மணிரத்னம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. 'தக் லைப்' அதை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் லைபில் மாற்றத்தை ஏற்படுத்துமா ?.