லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் விஷால் திரைப்படங்களில் நடிப்பதோடு, தனது அறக்கட்டளை நடத்தும் பல விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் 'மதகஜராஜா' விழாவில் கலந்து கொண்டபோது கை நடுக்கத்துடன் காணப்பட்டார், கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால், மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரவியது. இது குறித்து விஷால் அளித்துள்ள விளக்கத்தில் "மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை 5 வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன்.
நான் பார்ட்டிக்கே போவது கிடையாது. நான் கடைசியாக சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன். என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேண்டுமென்றாலும் பேசுகிறார்கள். இது என்னை பாதிக்கவும் செய்யாது. நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி'', என்று கூறியிருக்கிறார்.