தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‛ரெட்ரோ'. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரூ.100 கோடி வசூலை கடந்தது. கார்த்திக் சுப்பராஜ் அளித்த ஒரு பேட்டியில், "ஜகமே தந்திரம் படத்திற்கு பின் தனுஷ் உடன் இணைந்து இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தை முதலில் நான் இயக்குவதாக இருந்தது. இதற்காக இளையராஜா, தனுஷ் உடன் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை இயக்குவதில் இருந்து விலகினேன்" என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான துவக்க விழாவும் பிரமாண்டமாய் நடந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிப்பதாகவும், அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் இந்த படம் துவங்குவது தற்காலிகமாக தள்ளிப்போய் உள்ளது.