நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரது தயாரிப்பில் 2வது படமாக 'பென்ஸ்' படத்தை அறிவித்தனர்.
லோகேஷ் கதையில் உருவாகும் இதை ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குவதாகவும் இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்தனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றும், இதன் படப்பிடிப்பு துவங்காமல் நிலுவையில் இருந்தது. இதற்கு சாய் அபயன்கர் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் பூஜை நிகழ்வுடன் துவங்கியது. இதில் ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன், சாய் அபயன்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூஜை விழாவின் மூலம் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கவுதம், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் மற்றும் கலை இயக்குனராக ஜாக்கி ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.