எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் |
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, கார்த்தி நடித்த சுல்தான் போன்ற படங்களை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் பென்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி வில்லனாக நடிக்கிறார்.
இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது : இந்த படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதி இருக்கிறார். அவரது கதைக்கு நான் திரைக்கதை எழுதி இருக்கிறேன். அதோடு எல்சியு-வில் மற்ற இயக்குனர்களும் படங்கள் இயக்கலாம் என்ற ஐடியாவை முன் வைத்தவரே லோகேஷ் கனகராஜ் தான். அந்த அடிப்படையில் தான் இந்த பென்ஸ் படத்தில் நடக்கும் சில சம்பவங்கள் எல்சியு படங்களுடன் இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் எந்த பாகமும் இதில் இடம்பெறவில்லை. ஆனாலும் இது ஒரு எல்சியு படம் தான். ஹாலிவுட் சினிமாவில் ஒரே யுனிவர்சில் பல இயக்குனர்கள் வெவ்வேறு பகுதிகளில் இயக்குவார்கள். அந்த மாதிரியான ஒரு முயற்சியில் தான் இந்த படத்தை இயக்கி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.