தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் 'லியோ'. இந்த படத்தில் விஜய்யின் சகோதரியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அவரது கேரக்டர் இறந்துவிடும். இந்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் 'பென்ஸ்' படம் லோகேஷ் கனகராஜின் கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிவின் பாலி வில்லனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியங்கா மோகன், சம்யுக்தா மேனன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய செய்தியில், இந்த பென்ஸ் படத்தில் லியோ படத்தில் உயிரிழந்த மடோனா செபாஸ்டியன் கேரக்டர் உயிர் பெற்று வருவதாக கூறுகிறார்கள். அதோடு, மடோனாவின் இந்த கேரக்டர் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே தான் இயக்கிய லியோ படத்துடன் இந்த பென்ஸ் படத்தின் கேரக்டரையும் இணைத்து தனது எல்சியு வரிசையில் கொண்டு வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.